22 Sept 2017

வன்முறை - முறையற்ற முறையின் விளைவுகள்

வன்முறை - முறையற்ற முறையின் விளைவுகள்
            மனித குலம் இன்னும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை. வன்முறையின் மூலம் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தி விட முடியும் என்று நினைக்கிறது. பயத்தை உருவாக்குவதன் மூலம் சாதிக்க முடியும் என்று நினைக்கிறது. இது நல்லதல்ல. ஒரு எதிர்மறைத் தன்மையால் உருவாக்கப்படும் மாற்றம் நிச்சயம் எதிர்மறைத் தன்மையைத்தான் உருவாக்கும்.
            மனித குலம் மாற்றங்களை உருவாக்கப் பிறந்ததாக நினைத்துக் கொண்டு அடாவடித்தனத்தில் இறங்குகிறது. மாற்றம் என்பது தேவையான போது தானாக உருவாகிக் கொள்ளும். மாற்றம் உருவாவதை மாற்ற முடியாது.
            மனித குலம் தன் வழியில் சரியாகச் செயல்பட வேண்டும். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தவறான வழியில் செயல்படுவது இலக்கை அடைய உதவலாமே தவிர, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
            எப்படிப் பார்த்தாலும் மனிதகுலம் வன்முறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்தபாடில்லை. வன்முறையின் மூலம் அப்படி ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றம் மனிதகுலம் ஆணையிடும் ஓர் வேலையைச் செய்யவில்லை என்பதற்காகத் தண்டிப்பதிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது எனலாம்.
            ஒரு கோபம் இன்னும் கூடுதலாகவே கோபப்படச் செய்யும். அது ஒரு போதும் கோபத்தைக் குறைக்காது.
            ஒரு வன்முறை என்பது இன்னும் கூடுதலாக வன்முறையைத் தூண்டுமே தவிர, அது ஒரு போதும் வன்முறையைக் குறைத்துக் கொள்ளாது.
            கோபம், வன்முறை இரண்டுமே மனித குலம் தேர்ந்தெடுத்த மிக மோசமான பாதைகள்.
            ஓர் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக அவைகளைப் பயன்படுத்துவது பல நேரங்களில் உயிர்பலிகளைக் கேட்கும். உயிர்பலிகளை ஏற்படுத்தி விடவும் செய்யும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...