4 Sept 2017

அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா
செல்லமே என அழைப்பார்
தேவதையே என கொஞ்சுவார்
சிறுவேலையும் செய்ய விட மாட்டார்
சிறுதேவை என்றாலும்
பார்த்துப் பார்த்துச் செய்வார்
சிறுகாய்ச்சல் என்றாலும்
துடித்துப் போவார்
சிலநாள் டூர் சென்றாலும்
பிரிந்து எப்படி இருப்பேன் என புலம்புவார்
சில நிமிட தாமதத்துக்கும்
பலமுறை செல்பேசி அழைத்திடுவார்
நான் அவனைக் காதலிக்கிறேன்
என்று சொன்ன கணத்தில்
பொட்டில் பொட்டென
அறைந்த அப்பா!

*****

No comments:

Post a Comment