இக்கட்டுகள் முக்காடு போடும் போது...
சிலரை
நம்பிக் காரியத்தில் இறங்கக் கூடாது என்பது எஸ்.கே.விற்கு தெரியாதது அல்ல. அவர்களை
நம்பி காரியத்தில் இறங்கி படாத பாடு பட்டிருக்கிறான் எஸ்.கே. அவன் இடத்தில் வேறு யாரும்
இருந்திருந்தாலும் கத்திக் குத்துதான். இவ்விசயத்தில் அவன் பொறுமையானவன். அவன் யோசித்து
முடிவெடுப்பதற்குள் கத்தித் துரு பிடித்துப் போயிருக்கும்.
எஸ்.கே.விற்கு இப்போது இந்த உலகிற்கு
ஏதாவது சொல்ல வேண்டும் என்பது போலத் தோன்றியது. அவன் சொல்கிறான்...
"உங்களது ஆசைகள்தான் எதிரிகளின் ஆயுதங்கள்.
உங்களது ஆசைகளைத்தான் எதிரிகள் தங்களுக்குக் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
டிமாண்டை அதிகமாக்கி உங்களை மிரட்டவும் செய்கிறார்கள். அதற்கு நீங்கள் இடம் கொடுக்க
வேண்டிது இல்லை.
நீங்கள் ஆசைப்படுவது தெரிந்து அதை வைத்து
நீங்கள் பகடைக் காயாய் உருட்டப்படுகிறீர்கள் என்று தெரிந்தால், தாட்சண்யம் பார்க்காமல்
அந்த ஆசையைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். பிரச்சனைகள் தானாகக் குப்பைத் தொட்டிக்குப்
போய் விடும்.
வில்லங்கமான காரியங்களில் நீங்களாகச் சென்று
விழாதீர்கள். சில காரியங்கள் அதுவாக நடக்கும் போது இணைந்து கொண்டு நடத்த வேண்டும்.
அதுவே சிறப்பானதும் மற்றும் சரியானதும் ஆகும்."
*****
No comments:
Post a Comment