தியாகிகளாகிய நாம்
அழகிய பாடல்கள்
பாடி
அந்த சுடுகாட்டுப்
பேய்கள் அழைக்கின்றன
கவர்ச்சி ஆட்டம்
போட்டு
பிசாசுகள்
தங்களை நுகரச் சொல்கின்றன
பேராசை காட்டும்
பிரமாண்ட பூதங்கள்
கை பிடித்து
வழிநடத்திச்
செல்கின்றன
பண்பாட்டு
வட்டம் தாண்டி
வர முடியாத
அவைகள்
நம் மொழியை
கிண்டல் செய்கின்றன
நம் பழக்கவழக்கங்களைப்
பழி சொல்கின்றன
உலக குடிமக்களே
என அழைத்து
அடிமைகளாய்த்
தள்ளுகின்றன
கொஞ்சம் பணத்தையும்,
சலுகைகளையும்
தூண்டிலாய்ப்
போட்டு
நம்மைப் பிடித்து
திமிங்கலங்களைப்
பிடிக்கும் தூண்டில்களுக்கு
நம்மைத் தூண்டில்
புழுக்களாய்ச் செருகின்றன
நாம் துடிக்கும்
போது
நம் உயிர்த்தியாகத்தை
மெச்சி
அவைகள் பாடல்கள்
பாடுகின்றன
வரலாற்றின்
பக்கங்களில்
அவர்கள் செழிப்பாக
வாழ
நாம் தியாகங்கள்
செய்தவர்களாவோம்!
*****
No comments:
Post a Comment