10 Sept 2017

வெளியீட்டில் சிக்கிக் கொண்ட நூல்கள்

வெளியீட்டில் சிக்கிக் கொண்ட நூல்கள்
            ஒரு சிலரிடம் சில தெளிவுபடுத்தல்கள் எப்போதும் இருக்காது. அவர்கள் போக்கிற்குச் செயல்படுவார்கள். அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி விடும்.
            எஸ்.கே.விற்கு நூல் வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனையை நினைத்துப் பார்க்கும் போது இதற்கான விடை கிடைக்கிறது. அவரவர்கள் அவரவர் போக்கிற்கு மெதுவாகச் செய்வதை நியாயப்படுத்துவார்களே தவிர எஸ்.கே.யின் உள்ளார்ந்த விருப்பத்திற்கு யாரும் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை.
            எஸ்.கே.யின் கருத்துகளுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. அவ்வாறு இருப்பது அவரவர்களின் சுபாவம் என்பது போல நடந்து கொண்டார்கள்.
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் நூல் வெளியீடு என்பது மிகப் பெரிய கனவுத் திட்டம். அப்படி ஒரு கனவுத் திட்டம் அவனுக்குத் தேவையும் இல்லாதது. அதை அவன் நம்பி ஒப்படைத்த ஆட்கள் இருக்கிறார்களே! அப்படிப்பட்ட ஆட்களும் எஸ்.கே.யைப் பொருத்த வரை தேவையற்றவர்கள்.
            எஸ்.கே. இணையத்தில் மட்டும் எழுதித் தொலைத்திருக்கலாம். நூல் வெளியீடு என ஆரம்பித்து அவ்வளவு வில்லங்கங்கள், பிரச்சனைகளைச் சந்தித்து விட்டான்.
            இப்போது நூல் வெளியீடு என்றால் ஒதுங்கி இருப்பதே நல்லது என இருக்கிறான். அவை போன்றவைகள் அவைகளாக அமைந்தால் நல்லது. அவனாக அமைக்க முயல்வது நல்லதல்ல என்பதில் நல்ல தெளிவோடு இருக்கிறான்.
            புத்தகங்களை விட அனுபவங்கள் பெரிய பாடங்கள் (எஸ்.கே.வுக்கு)

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...