19 Sept 2017

வெற்று வார்த்தையின் அடிமைகள்

வெற்று வார்த்தையின் அடிமைகள்
வளின் அடிமைத்தனத்தை
ஏற்றுக் கொண்டு
அவளை நேசித்துக் கொண்டிருப்பதை
காதல் என்பேன்
அவள் அதை உளப்பூர்வமாக ஏற்று
வெற்று வார்த்தையின்
மகிழ்ச்சிக்காக
அடிமையாக வாழ்ந்து
அடிமையாகச் செத்துப் போவாள்
அவள் சாகும் நாளில்
மற்றொரு அடிமையை மறுமணம் செய்து
என் காதலைச் சொல்வேன் அவளிடம்
வெற்று வார்த்தையின்
மகிழ்ச்சிக்கு
மற்றொரு அடிமை தயார்.

*****

No comments:

Post a Comment