17 Sept 2017

நைட்டியில் ஒரு தேவதை

நைட்டியில் ஒரு தேவதை
நீ தூக்கிச் செல்லும்
ப்ளாஸ்டிக் குடத்திலிருந்து
ஒழுகும்
ஒரு சொட்டு நீரை
தீர்த்தம் என்பேன்.
ப்ளாட்பாரக் கடையில்
பேரம் பேசி எடுத்த
நைட்டியில்
நீ உலாவுவதை
தேவதையின் வருகை என்பேன்
பருக வாங்கிய
டீ கிளாஸில் குறைந்த
சில மில்லி தேநீருக்காக
நீ போட்ட சண்டையை
உன் அழகு என்பேன்.
குடிகாரத் தந்தை
வியாதிக்காரத் தாய்
ஊனமான சகோதரனைத் தாங்கி
சலிப்பின்றி
சந்தோசமாக நீ சுமப்பதை
சத்தியமாய்க்
காதல்
காதல்
காதல் என்பேன்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...