பழகிப் பார்ப்போம் வாருங்கள்!
யாரை நம்பி எதைச் சொல்வது?
யாரும் பொறுப்பானவர்களாக இல்லை என்பதே
அநேகமாக எல்லாருடைய பதிலாக இருக்கிறது.
நல்ல செய்திகள் என்றால் யாரையும் நம்பாமல்
எல்லாரிடமும் சொல்லலாம். எந்தப் பாதகமான விளைவுகளும் ஏற்படப் போவதில்லை.
ஒருவரைப் பற்றிய வதந்தித்தனமான ஒரு கெட்ட
செய்தியை யாரையும் நம்பி எவரிடமும் சொல்லாமல் இருக்கப் பழக வேண்டும். இதற்கும் பழக்கமா?
நிச்சயமாக!
ஒருவரைப் பற்றிய கெட்ட செய்தியைக் கேட்ட
மாத்திரத்தில் சொல்லும் பழக்கம் இல்லையென்றால் பிரச்சனையில்லை.
அப்படியொரு பழக்கம் இருக்கிறது என்றால்,
அதற்கு எதிரான பழக்கத்திற்குப் பழகிக் கொள்வதுதானே வழிமுறையாக இருக்க முடியும்.
ஆகவேதான் பழக வேண்டும்.
கெட்டவைகளைப் பழகி விடும் போது, அவைகளை
விடுவதற்காகவும் பழகத்தான் வேண்டியிருக்கிறது.
*****
No comments:
Post a Comment