16 Sept 2017

அறிவுரை எனும் ஆயுதக் கொடுமை

அறிவுரை எனும் ஆயுதக் கொடுமை
எங்களுக்கு இன்னும் கூட கால அவகாசம் தேவைப்படுகிறது
எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை
எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைப் புரிந்து கொள்ள
இன்னும் கூட கால அவகாசம் தேவைப்படுகிறது
அந்தக் கால அவகாசத்திற்கு இடமில்லாமல்
அறிவுரைகளால் எங்கள் மூளை நசுக்கப்படுகிறது
அறிவுரைகளை அவ்வளவு விரைவாகப்
புரிந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது
கொஞ்சம் கால அவகாசம் கிடைத்தாலும்
நாங்கள் சிந்தித்து விடுவோம் என்பது
அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது
அதற்கு இடந்தராமல் அடுத்தடுத்து
அவதூறுகளை வீசியெறிந்து
அறிவுரைகளை ஏற்கச் செய்கிறார்கள்
அந்த அவதூறுகள் ஒவ்வொன்றும்தான்
எங்களைச் சிந்திக்கச் செய்கிறது என்பது
அவர்களுக்குத் தெரியாது.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...