பெட்டிக்குள் புதையுண்டு போகும் அடையாளங்கள்
அடையாளங்களைத் துறந்து விட்டு வாழ்வது
ஓர் வாழ்வாகுமா?
தக்கனத் தப்பிப் பிழைக்க அதுதான் வழி என்றால்
என்ன செய்வது என்று கேட்பார்க்கு என்ன சொல்வது?
போராட்ட வரலாற்றின் தடயங்கள் காலப் போக்கில்
அழிக்கப்பட்டு விடும் அபாயத்தை நாம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம்.
போராடாத ஒரு மனித இனத்தை உருவாக்க பெட்டிகளும்,
அடி வருடிகளும் உருவாகிக் கொண்டு இருக்கின்றன(ர்)
போராட்டத்தின் உயிர் நாடி ஒற்றுமை. அந்த
ஒற்றுமையை எப்படிப் பணப் பெட்டிகளால் விலைக்கு வாங்க முடியும் என்ற சூட்சமம் மேட்டிமை
சமூகத்துக்குத் தெரிந்து இருக்கிறது.
பெட்டிகளுக்கு எப்படி விலை போவது என்பதும்
சாமர்த்திய சங்கவாதிகளுக்குத் தெரிந்து இருக்கிறது.
அடையாளங்கள் போனால் மீட்டு விடலாம் என்பதும்
உரிமைகளை இழந்தால் பெற்று விடலாம் என்பதும்
பெட்டிகளை இழந்தால் மீண்டும் பெற முடியாது
என்பவர்களின் வாதமே அன்றி வேறல்லவே.
*****
No comments:
Post a Comment