6 Sept 2017

உண்மைகளை உளறுவதின் ஆகப் பெரும் பிரச்சனைகள்

உண்மைகளை உளறுவதின் ஆகப் பெரும் பிரச்சனைகள்
            ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் முடிவு எடுக்க முடியாமல் தவிப்பதுதான். வாழ்க்கையின் பல சூழ்நிலைகள் அப்படித்தான் அமைகின்றன.
            மனிதனது எல்லா நம்பிக்கைகளையும் தவிடு பொடி ஆக்குவது போலத்தான் அடுத்தடுத்து ஏதாவது நடக்கும். அவன் நம்பிக்கையை வைத்துக் கொள்வதா? தூர எறிந்து விடுவதா? நம்பிக்கையோடு இருந்தால் அதை தூர எறியச் சொல்லும். நம்பிக்கை இழந்தால் நம்பிக்கைக் கொள்ளச் செய்யும். காலத்தின் விளையாட்டு இது.
            உண்மையை வெளியே சொன்னால் தீர்வு கிடைக்குமோ எண்ணுகிறான் அவன். உண்மையில் அவனது எல்லா பிரச்சனைகளும் உண்மையை வெளியே சொன்னதால் ஏற்பட்டதாக இருக்கின்றன.
            உண்மை அவனைப் பொருத்த வரை எப்படி ஆகிறது என்றால் இருக்கின்ற பிரச்சனைகளே பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு, மேற்கொண்டு உண்மைகளை வெளியே சொல்லாமல் இருப்பதே நல்லது என்பதாகி விடுகிறது.
            மேலும் உண்மை என்னவென்றால் ஓர் உண்மையை அவன் உண்மையைச் சொல்லி விட்டால் அது தொடர்பாக சுற்றியுள்ளவர்கள் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவன் அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய சாபத்திற்கு ஆளாகி விடுகிறான்.
            ஒரு உண்மையை அவன் வெளியே சொல்லும் போது அது தொடர்பாகவே சுற்றி உள்ளவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவனால் தப்பிக்க முடியாது. அவன் அது தொடர்பாக மட்டுமே சிந்திக்கும் படி நிர்பந்திக்கப் படுகிறான். அவன் அதிலிருந்து வெளியே சொல்ல முடியாது. அதைச் சுற்றிச் சுற்றியே சுற்றி இருப்பவர்களுக்குத் திருப்தி தரும் வகையில் அதையே அவன் வெவ்வேறு வகையில் சிந்தித்துக் கொண்டு இருக்க ஆரம்பித்து விடுகிறான்.
            சொல்லப்படாத உண்மைகளுக்கு இந்த கதி ஏற்படுவதில்லை. அவை பேசாப் பொருளாக அமைதியில் திளைக்கின்றன.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...