சொல்லாடல்களின் பிம்பங்கள்
கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில்
இருந்து மருத்துவப் படிப்பிற்குத் தேர்வானவர்களின் எண்ணிக்கை 400 க்கும் குறைவு என்று
புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
அந்த புள்ளி விவரக் கணக்குப்படிப் பார்த்தால்
அரசுப் பள்ளிகளிலிருந்து மருத்துவப் படிப்பிற்கு சராசரியாக வருடத்திற்குத் தேர்வானாவர்கள்
40 பேர்.
இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் இருக்கும்
மருத்துவ இடங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தைக் கூட எட்டிப் பார்க்காது.
மருத்துவ மாணவர்களின் இந்த எண்ணிக்கையைக்
கொண்டு மட்டும் அரசுப் பள்ளிகளின் தரத்தை அளவிடக் கூடாது. அரசுப் பள்ளிகளின் தரத்தை
அளவிடுவதற்கு இதுவும் ஒரு அளவுகோல் என்பதை மறுப்பதற்கில்லை.
பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. இது அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து
அளவிடுவதற்கு மற்றும் ஒரு அளவுகோல்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றில்லாமல்
அரசு அதிகாரிகள், அரசு அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் என்று
யாரும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் பொதுவாக சேர்ப்பதில்லை.
அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் குறித்த
உயர்வான பிம்பங்களும் கட்டமைக்கப்படுகின்றன. பிம்பங்கள் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி
விட்டதால் அவைகள் வெறும் பிம்பங்களே என்று விட்டு விடுவதா? அப்பிம்பங்கள் மெய் நிலையை
அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதா?
இப்பொருளின் மெய்ப்பொருளைக் காண வேண்டும்.
*****
No comments:
Post a Comment