12 Sept 2017

அழகு யானை

அழகு யானை
கோயிலில்
கல்லாகிச் சமைந்த
யானைகள்
அதற்கு மேல்
காட்டில் அலைவதில்லை
தண்டவாளங்களில் ரயிலில்
அடிபட்டுச் சாவதில்லை
வீதி வீதியாக
பாகனுக்குப் பயந்து
பிச்சை ஏந்துவதில்லை
மக்களுக்கும்
பார்க்க வசதியாக இருக்கிறது
வயல்களில் வந்து
அட்டூழியம் செய்யாத
அழகான யானைகள் என
யானைத் தோலுரித்து அணிந்த
சிவனுக்கு மட்டும் ஏக்கமும் வெட்கமும்
தோலுரித்து அணிய
ஒரு யானையின்றி
அம்மணமாய் நிற்கிறோமே என!

*****

No comments:

Post a Comment