புதிய ரோல் மாடல்களே! உருவாகுங்கள்!
ஆறுதல் யாரிடமிருந்து வேண்டுமானால் கிடைக்கலாம்.
நீங்கள் எதிர்பார்ப்பவர்களிடமிருந்து சத்தியமாய் கிடைக்காது.
அது எப்படி என்றால், உங்கள் நிம்மதியைக்
கெடுத்தவர்களே அவர்களாகத்தான் இருப்பார்கள்.
அவர்களிடம் எப்படி ஆறுதலை எதிர்பார்ப்பீர்கள்?
ஆனால், மனம் அப்படித்தான் எதிர்பார்க்கும்.
ஒருவேளை அவர்களிடம் தினையளவு ஆறுதல் பெற்றாலும்,
பனையளவு பிரச்சனைகளாகத் திரும்பி வரக் கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அவர்களிடம் ஆறுதலைத்
தேடாதீர்கள்.
சோர்வுதான் ஆறுதலைத் தேடுகிறது.
உற்சாகம் எதையும் தேடுவதில்லை.
உற்சாகம் உற்சாகத்தைத் தருகிறது.
சோர்வு சோர்வைத் தருகிறது.
உற்சாகமாக இருப்பதாக முடிவெடுத்து விட்டால்
இந்த உலகத்தின் புதிய ரோல் மாடல் நீங்கள்.
*****
No comments:
Post a Comment