மனக்கோளாறுக்கான மருந்து 0.01 எம்.எல்.
பெ.ய்.ன்.
உடல் உழைப்பு களைப்பைக் கொண்டு வருகிறது.
களைப்பு நல்லது.
பல மனக்கோளாறுகளுக்கும், மனப் பிரச்சனைகளுக்கும்
அவரவர் உடலிலிருந்து வெளியேறும் வியர்வையில் மருந்து இருக்கிறது.
வியர்க்க ஆரம்பித்து விட்டால் பிரச்சனைகள்
மாறி விடுகின்றன.
வியர்வை மனதைக் கழுவி விடுகிறது.
பூதாகரமான மனப் பிரச்சனைகள் வியர்வையில்
உருகி விடுகின்றன.
வெயில் நம்மை வேர்க்க வைத்து விடுமோ என்று
ஏ.சி. அறைக்குள் சமர் புரிகிறோம்.
ஏ.சி. அறைகளின் வெயியேறாத வியர்வையில்
மனம் புழுங்கிக் கிடக்கின்றது.
உடல் உழைப்பினால் உடல் வலிக்கும் போது,
மன வலி குறைவதை அனுபவப்பட்டுதான் உணர முடியும்.
மன வலிக்கு மருந்து உடல் உழைப்பினால் வரும்
உடல் வலிதான் என்பது வினோதமாக இருக்கலாம்.
மருந்துகள் எளிமையாகத்தான் இருக்கின்றன.
நோய்கள் சிக்கலாக இருக்கின்றன என்பதால்
மருந்துகளும் சிக்கலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லைதானே!
*****
No comments:
Post a Comment