23 Sept 2017

உயிர்த் தன்மையின் நச்சுக் கிருமி

உயிர்த் தன்மையின் நச்சுக் கிருமி
            நம் சூழ்நிலைகள் நம்மை நிர்ப்பந்தப்படுத்துகின்றன. எப்படியாவது இலக்கை அடைய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கின்றன. அந்த நிர்ப்பந்தங்களுக்கு நாம் அடிபணியும் போது அல்லது அதை நிறைவேற்ற வேண்டும் என நாம் நிர்ப்பந்தப்படுத்தும் போது அதை அடைவதற்கான எந்த பாதையையும் தேர்ந்தெடுக்க நாம் தயாராக இருக்கிறோம். இதுதான் வன்முறையின் துவக்கப் புள்ளியாக அமைந்து நம்மை ஒரு வன்முறையாளனாக மாற்றுகின்றன.
            ஒரு மனிதன் தன் உயிர்த்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, அடித்தல், துன்புறுத்தல்கள், தண்டனைகள் முதலிய வன்முறைகள் மூலம் உயிர்த்தன்மைக்கு உலை வைத்துக் கொள்ளக் கூடாது.
            அடிக்க வேண்டும், திட்ட வேண்டும், வன்முறையில் இறங்க வேண்டும் என்ற உணர்வுகள் எழுவதில், நம் கண் முன்னே நிகழும் நிகழ்வுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
            ஒருவர் வன்முறையில் இறங்குவதைப் பார்த்து மற்றவர் வன்முறையில் இறங்குவது தோற்று நோயைப் போல எளிதில் பரவக் கூடியது. வன்முறைகள் இரும்புக் கரங்கள் கொண்டு தடுக்கப்பட வேண்டும்.
            பரிவும் அன்பும்தான் வாழ்க்கையின் தேவைகள். அச்சுறுத்தல்கள், தண்டனைகள், மிரட்டல்கள் வாழ்க்கையின் மோசமான தன்மைகளை உருவாக்கக் கூடியவை. அவைகள் தவிர்க்கப்பட வேண்டியவைகளே தவிர, ஆதரிக்கப்பட வேண்டியவைகள் அல்ல.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...