11 Sept 2017

உதவாக்கரை முறைகளின் பயன்பாடுகள்

உதவாக்கரை முறைகளின் பயன்பாடுகள்
            யாரையும் தவறாக எடை போடாதீர்கள்.
            யாரும் இம்மி கூட தன் குணாதிசயத்திலிருந்து மாறி வர மாட்டார்கள்.
            தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல அவரவர்கள் அவரவர்களாக இருக்கிறார்கள்.
            யாரும் யாருடைய கட்டுபாட்டிலும் வர முயல்வதில்லை.
            அவரவர்கள் அவரவர் கட்டுபாட்டில் இருப்பதைத்தான் விரும்புவார்கள். அவரவர் கட்டுபாடு என்றால் அவரவர் மனம் சொல்லும் பாதுகாப்பு அம்சங்களோடு கூடிய கட்டுபாடு.
            யாரையும் மாற்ற முயல வேண்டாம்.
            ஒருவரிடம் எப்படி இருப்பது பாதுகாப்பு என்று கருதுகிறீர்களோ, அப்படியே இருங்கள்.
            முதலில் பாதுகாப்புதான் முக்கியம். சாதிப்பது அப்புறம்.
            சாதிக்க முயன்று பாதுகாப்பற்றுப் போனவர்கள் ஏராளம்.
            நினைத்ததைச் சாதிப்பதற்கான காலம் அதுவல்ல என்றால் ஒதுங்குங்கள்.
            அதற்கான காலம் வரும் வரை காத்திருங்கள்.
            வலிந்து முயலாதீர்கள். அதனாலே வலிய வலிய பல பிரச்சனைகள் தோன்றும்.
            மீள்வதற்கான வழிமுறை எப்போதும் புதியவை அன்று. அது எப்போதும் போல பழமையானதுதான்.
            பழமையை மீட்டுக் கொண்டு வாருங்கள். புதிய தீர்வு ஒன்று கிடைக்கும்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...