1 Sept 2017

இரகசிய அழுகை

இரகசிய அழுகை
            எஸ்.கே. எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவன். திடீரென ஒரு விசயத்தை எப்படி அவன் சீரியஸாக எடுத்துக் கொண்டான்?
            எதைப் பற்றி அவன் அதிகம் பேசுகிறானோ, அதைப் பற்றி அவன் சிந்திக்கிறான் என்பது பொருள்.
            அவனது நீதிமன்ற வழக்கு தொடர்பான ஒரு விவாதத்தில் அதிகம் உரையாடிக் கொண்டிருந்தான். அதிகம் உரையாட உரையாட அதிலிருந்து ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.
            ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் அவன் வெறித்தனமாக முயன்றும் குழப்பம் அதிகமானது. தீர்வு காணாமல் போனது.
            எஸ்.கே. அசந்தான் இல்லை. தனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஜஸ்ட் லைக் தட் காட்டிக் கொண்டான்.
            தனது நோக்கம் வெளியில் தெரியாத வரைதான் அது குறித்துத் தெளிவாகத் திட்டமிட்டு அந்த வழியில் செல்ல முடியும் என அவன் தன் நாட்குறிப்பில் பதிந்து கொண்டான்.
            வெளியில் எவையெல்லாம் தெரிகிறதோ, அவைகளுக்கு ஆதரவாக முட்டுக்கட்டைகள் முளைத்து விடும் என தன் கண்களை மூடிக் கொண்டு அழுதான் எஸ்.கே.
            கண்ணீர்த்துளி கன்னத்தை நனைக்காத காரணத்தால் அவன் அழுததை உலகம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
            எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவன் எஸ்.கே. என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டு விட்டது. இதை நினைத்து அவன் அவ்வபோது ரகசியமாக அழுது கொள்கிறான்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...