காத்திருப்பில் கலந்து வரும் துரோகம்
தன்னெழுச்சியானப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்
மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக இருக்கிறது.
பாதிக்கப்படுபவர்கள், பாதிக்கப்படும் நிலையில்
உள்ளவர்கள் போராட்டங்களை முன்னெடுக்காத ஒரு முரணைத் தமிழகத்தில் காண முடிகிறது. சமூக
அக்கறை உள்ள சிலர் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நீட் தேர்விற்கானப் போராட்டங்களை எடுத்துக்
கொண்டால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை விட, கலைக்கல்லூரி
மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகமாக இருக்கிறது.
மற்ற பற்பல போராட்டங்களை எடுத்துக் கொண்டால்...
குறிப்பாக போராட்டத்தின் நெளிவு சுளிவுகள்
அறிந்த போராட்டத்திற்கானப் பிறப்புரிமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுபவர்களை எடுத்துக்
கொண்டால்...
நிலைமை எப்படி இருக்கிறது என்றால்...
இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்று காத்திருக்கும்
அவர்களை என்ன சொல்வது? எந்த நம்பிக்கைக் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்று காத்திருக்கிறார்கள்?
அய்யாக்கண்ணுக்களிடம் வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்ட
நம்பிக்கைக்காகவா? நீட் தேர்வில் வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்ட நம்பிக்கைக்காகவா?
முன்னெப்போதையும் விட தற்போது வழங்கப்படும்
நம்பிக்கைகள் பெருத்த மோசடிகளாக இருக்கின்றன. வழங்கப்படும் வாக்குறுதிகள் பெருத்த
தாஜாக்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன.
விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் போராடாமல்
இருப்பவர்கள் இருக்க வேண்டும். நிலைமை தலைகீழாக இருக்கிறது. விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான்
போராடுபவர்கள் இருக்கிறார்கள்.
களம் காண வருவதாகச் சொல்லி விட்டு கடைசி
வரை நம்பிக்கை தந்து விட்டு கடைசி மைக்ரோ நொடியில் பிடரியில் அடித்தபடி பின்னங்கால்கள்
பின்னிக் கொள்ள ஓட்டம் பிடிப்பவர்கள் எத்தகைய மாபெரும் நம்பிக்கையை விதைத்து விட்டுச்
செல்கிறார்கள்.
வரலாற்றின் தலைவிதி விரோதிகளோடு நெஞ்சம்
கனக்க எல்லோரையும்(!) சுமக்க வேண்டும் என்று இருக்கிறது.
*****
No comments:
Post a Comment