8 Sept 2017

நிர்பயாவாக மாறிய அகலிகை

நிர்பயாவாக மாறிய அகலிகை
இந்திரக் குமாரர்கள்
ஏழுபேர் ஓடும் தேரில்
அகலிகையை நிர்மூலமாக்கி வீசினர்
கல்லாய்ப் போவதாக எனச் சபித்த
‍கெளதம மாமுனி
அவள் உடுத்திய ஆடையைக் குறை கூறி விட்டு
அவன் மட்டும் அரை நிர்வாணக் கோலத்தோடு
காலப்பெட்டியில் எப் டி.வி. பார்க்க
வடக்கு நோக்கிச் சென்றான்
கட்டிய மனைவியை
நெருப்பாற்றில் குளிக்க விட்டு
தான் மட்டும் புண்ணிய நதியில்
தீர்த்தமாட வந்த ராமன் கால் பட்டு
உயிர் பெற்ற அகலிகை
அன்று முதல் நிர்பயா என்று
புனிதம் பெற்றாள்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...