24 Sept 2017

அவைகளாக ஏற்படும் பாதிப்புகள்!

அவைகளாக ஏற்படும் பாதிப்புகள்!
            அன்றைய நாளில் எஸ்.கே. மிகவும் மனம் உடைந்து காணப்பட்டான். இனி அவன் நன்றாகச் சாப்பிடுவது கேள்விக்குறிதான்.
            ஒவ்வொருவரும் அவரவர்களின் மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்டு அவனது மனநிலையை மிகவும் பாதிப்பதாக அவன் கருதுகிறான். அவர்கள் அப்படி நடந்து கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை. அப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று அவனால் கூறவும் முடியவில்லை. அவைகள் எதுவும் அவன் கட்டுபாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அவனாக அவைகளைக் கட்டுபடுத்தினாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.
            இந்த அளவுக்கு நடப்பதே வாழ்க்கை தந்த சீதனம் என்பது போல அவன் நினைத்துக் கொள்கிறான். அதற்கு மேல் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது அவனது அபிப்ராயம். எதிர்பார்த்தாலும் கிடைக்காது என்பது வேறு விசயம்.
            எதுவும் அதுவாகக் கிடைத்தால்தான் உண்டு அவனுக்கு. கிடைக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால் அவர்கள் கிடைக்காமல் செய்வதற்கான அத்தனை கண்கட்டி வித்தைகளையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
            அன்று மாலை என்ன செய்வதென்றே புரியாமல் அவன் அப்படியே படுத்து விடடான். இனி அவனால் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதை அவனாக உணர்ந்த தருணம் என்பதைப் போல அதை அவன் கருதிக் கொண்டான்.
            ஒவ்வொருவரும் ஒரு பிடிவாதமான மனநிலையில் உறைந்து கிடக்கிறார்கள். அவர்களின் உறைந்து போன நிலைக்கு எஸ்.கே.யையும் மாற்ற முயலுகிறார்கள். அல்லது அந்த மனநிலைக்கு ஆதரவாக அவனைக் கொம்பு சீவி விடுகிறார்கள்.
            அவர்களின் குறுகிய மனப்பான்மைகளால் அவர்களுக்கு அவர்களே துயரத்தை எற்படுத்திக் கொள்வதோடு, எஸ்.கே.வுக்கும் துயரத்தை எற்படுத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி விளக்கிப் புரிய வைத்தாலும் அவர்கள் எஸ்.கே.வைப் புரிந்து கொள்ள தயாராக இல்லை. மாறாக, அவனது சுபாவத்தைப் பற்றி ஏச தயாராக இருக்கிறார்கள்.
            எல்லாவற்றின் ஆரம்பப் புள்ளியும் ஒருவரின் சுபாவமும், அதி சுத்தமான பிடிவாதமான மனநிலையும்தான். ஒருவரின் பிடிவாதமான சுபாவத்தாலும், அதி சுத்தமான மிகை மனப்பான்மையாலும் ஓர் அமைப்பிற்குள் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லி மாளாது. அவைகளை எளிதில் மாற்றி விட முடியாது. அவைகளாக மாறினால் உண்டு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...