23 Sept 2017

பேச்சுக் கொலை

பேச்சுக் கொலை
            பேச்சு அவ்வளவு முக்கியமானது. அதில் பேசும் சொற்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
            நீங்கள் நினைக்கும் பொருளிலே எல்லாரும் பொருள் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவரவர் மனம் சார்ந்து பொருள் கொள்வார்கள். கருத்து வேறுபாடுகள் அப்படித்தான் பிறக்கின்றன. நீங்கள் சொல்வது நல்லதாக ஆவதும், கெட்டதாக ஆவதும் இப்படித்தான்.
            அவரவர் மனம் கொண்டு அவரவர் பொருள் காண்பதால் எச்சரிக்கையாகப் பேச வேண்டும். கொஞ்சம் பிறழ்ந்தாலும் எல்லா பழியையும் தூக்கி உங்கள் மேல் போட்டு விடுவார்கள்.
            பொதுவாக மகிழ்ச்சியாகப் பேசுவது நலம். பேச்சு துக்ககரமாக மாறும் போது அதற்காக அனுதாபம் தெரிவித்து உடனடியாக வெளியேறுவது மிக மிக நலம்.
            உணர்ச்சிவசப்படுகின்றவர்களிடம் பேச நேர்வதைப் போன்ற கொடுமை உலகில் வேறெதுவும் இல்லை. அவர்களின் உணர்ச்சியைத் தணிக்கவும் முடியாது. பேச்சை நிறுத்தவும் முடியாது.
            நீங்கள் பேசப் பேச எடை போடப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் பேச்சு அளவோடு இருக்கும்.
            பேசும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது போல் பாசாங்கு காட்டி விட்டுப் போங்களேன். அவ்வாறு நடக்காமல் இருப்பதன் மூலம் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுங்கள். எதையும் வார்த்தை மூலம் காட்ட நினையாதீர்கள். அப்படிக் காட்டினால் அந்த விளக்கத்தையே மிக மோசமாக்கி அதையும் சேர்த்து உங்கள் தலையில் கட்ட தயாராக இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...