4 Sept 2017

கண்கள் செய்த துர்பாக்கியம்!

கண்கள் செய்த துர்பாக்கியம்!
            எப்படியெல்லாம் நாசுக்காக கடன் இல்லை என்பதை மறுக்க முடியும் என்பதை வங்கிக் பணியாளர்களைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
            கடன் கொடுக்க முடியாது என்பதை விதிகளை வசதியாகப் பயன்படுத்தும் வல்லமையை அவர்களிடமே காண முடியும். அதற்காகத்தான் அவர்கள் விதிகளையே உருவாக்கியிருக்கிறார்கள் போலும்.
            அந்த விதிகளைப் பார்த்து நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கடன் வாங்கச் சென்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா எனத் தெரியவில்லை.
            வட்டிச் சற்று கூடுதலாக வாங்கினாலும் இன்றைய சூழ்நிலையில் தனித்துறை வங்கிகளே கடன் வாங்குவதில் சற்று ஆசுவாசம் தருபவைகளாகவும், வட்டிச் சற்று குறைவாக வாங்கினாலும் பொதுவானத்துறை வங்கிகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் பாதுகாவலர்களாக இருப்பதைக் காணக் கிடைப்பது கண்கள் செய்த துர்பாக்கியமோ என்னவோ!

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...