4 Sept 2017

ஒரு சுவாசம், ஒரு வேண்டல்

ஒரு சுவாசம், ஒரு வேண்டல்
எத்தனையோ இரவுகள்
உண்ணாமல் இருந்திருக்கிறேன்
மாபெரும் தலைவர்களின்
ப்ளெக்ஸ்கள் ஜொலிக்கும்
ப்ளாட்பார அடிவாரத்தில்
வாகனப்புகையை
சுவாசித்துக் கொண்டு!
எத்தனையோ பகல்கள்
எச்சில் சோற்றைப்
பொறுக்கி உண்டிருக்கிறேன்
சொகுசு வாகனங்களில் செல்லும்
அவர்கள் பசியற்று
எச்சில் சோறு நிறைய
மிச்சம் வைக்க வேண்டும் என்று
வேண்டிக் கொண்டு!

*****

No comments:

Post a Comment