மரணப் போராட்டம்
"பார்த்தியா! இனிமே போராடக் கூடாதுன்னு
நீதிமன்றமே சொல்லிடுச்சு!" என்றான் சமத்து சம்புலிங்கம்.
"போராட வராம வீட்டுக்குள்ளயே இருக்குற
நீயெல்லாம் ஏன்டா அதையெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்குறே?" என்றான் சோதிலிங்கம்.
"இனிமே என்னைப் போராட வான்னு கூப்பிட
மாட்டேல்ல! அதுக்குத்தான்!" என்றான் போராட வருவதாகச் சொல்லி விட்டு, கடைசி நேரத்தில்
தலைவலி, காய்ச்சல் என்று போராட்டத்துக்கு வராமல், விடுப்பு எடுக்காமல் பணிக்குச் சென்று
விட்ட சமத்து.
*****
No comments:
Post a Comment