அழகான வார்த்தை
ஓர் அழகான
வார்த்தை
பளிச்சிடுகிறது
மின்னலென நீ
எதிர்வருகையில்.
கண்களைக் குருடாக்கி
விட்ட
அந்த வார்த்தையை
பார்க்க முடியாமல்
உன்னிடமே தந்து
விட்டேன்
படித்துச்
சொல் என்று.
ஒரு செய்தி
வாசிப்பாளினி போல்
படித்தப் பின்
உனக்கும் அந்த
வார்த்தைக்கும்
சம்பந்தம்
இல்லாதது போல்
சென்று விட்டாய்
மீண்டும் பளிச்சிட
ஆரம்பித்தன
மின்னல்கள்!
*****
No comments:
Post a Comment