புரட்சிக்குத் தேவையான முதல் மாற்றம்
அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கக்
கூடாது. ஒரு நாளைக்கு ஒன்பது முறையாவது இந்த வாசகத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. என்ன
செய்வது அவரவர் மனநிலை அவரவர்க்கு முக்கியமாக இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மனநிலைக்கு
ஏற்ப ஆடும் ஒரு மிருகம். அந்த மனநிலைக்கு ஏற்ப மற்றவர்களையும் ஆட்டுவிக்க நினைக்கும்
குரங்காட்டியும் கூட.
ஒரு மனிதனின் ஆறுதல் இன்னொரு மனிதனுக்குச் செல்லாமல்
போகலாம். அப்படியானால் ஆறுதல் என்பது பிழையா? ஆறுதல் என்பதை சொற்கள் தீர்மானிப்பதில்லை.
கேட்பவரின் மனநிலை தீர்மானிக்கிறது.
கழுவுற நீரில் நழுவுற மீனாக தப்பிப்பவர்கள்
எத்தனை பேர்! அவர்களைப் பார்க்கும் போது கோபந்தான் ஏற்படுகிறது. மற்றவர்களின் மனநிலைகளை
எதிர்கொள்ளாமல் மாறிப் போன மனிதர்கள் அவர்கள்.
கொஞ்சம் மனநிலைகளையும் கணக்கில் எடுத்துக்
கொண்டால் புதிய அணுகுமுறைகள் பிறக்கும். நம்மைச் சுற்றிலும் புதிய மனிதர்களும் பிறப்பார்கள்.
எதிரிகளாக கண்ணுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களாகத் தெரிவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.
*****
No comments:
Post a Comment