15 Sept 2017

அப்பிடிக்கா கொஞ்சம்! இப்பிடிக்கா கொஞ்சம்!

அப்பிடிக்கா கொஞ்சம்! இப்பிடிக்கா கொஞ்சம்!
            வடக்கே அக்கிரமம் செய்த ஒரு சாமியார் கைதானதற்கு பொது மக்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
            தெற்கே பொது மக்களுக்காகப் போராடுபவர்களைக் கைது செய்து உள்ளே அடைக்கிறார்கள்.
            இட்லிக்கு முதற்கொண்டு ஜி.எஸ்.டி. கட்டி விட்டு வெறுங்கையோடு திருவோடு ஏந்திக் கொண்டு போனால் நல்ல குடிமகன் என்கிறார்கள்.
            ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லையே என்று கேட்டால் தேசத் துரோகி என்று பட்டம் சூட்டி கட்டம் கட்டி காலி பண்ணுகிறார்கள்.
            நீட் தேர்வு வேண்டாம் என்றால் கதறத் கதறத் திணிக்கிறார்கள்.
            காவிரித் தண்ணீர் வேண்டும் என்றால் ம்ஹூம் வாயைத் திறக்காதே என்கிறார்கள்.
            நாம் வாங்கித்தானே ஆக வேண்டும் என்று அரிசி, பருப்பு, பெட்ரோல், டீசல், சிலிண்டர் என்று விலையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
            இல்லையென்று சொன்னால் போய் விடுவோம் என்று ரேஷன் கடைகளைக் குறைத்துக் கொண்டே போகிறார்கள்.
             இந்தியா பன்முகம் கொண்ட வித்தியாசமான தேசம் என்பதை இப்படியா நிறுவ வேண்டும் மக்களே!

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...