13 Sept 2017

களை

களை
அப்பா காலத்தில்
அடகு வைத்த
அத்தனைப் பத்திரங்களையும்
மீட்டேன்
டவுனில் வாங்கி வைத்திருந்த
சிறு துண்டு நிலத்தை விற்று!
அச்சிறு நிலத்தில்
இருந்திருந்தால்
சர்க்கரையோ, கொழுப்போ,
புற்றுக்கட்டியோ
முளை கட்டி வளர்ந்திருக்கும்.
மாற்றாக வாங்கிய
பெருநிலத்தில் வந்து தங்கியதால்
பயிர்களோடு
பட்டாம் பூச்சிகளும், பறவைகளும்
கூடவே
திருப்தியோடு கொஞ்சம் மகிழ்ச்சியும்
களை கட்டுகிறது!

*****

No comments:

Post a Comment