ஒற்றை நிலை ஆபத்துகள்
எப்படிப் பார்த்தாலும் நாம் மனஉளைச்சலை
உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். இப்படித்தான் மனஉளைச்சல் உருவாகிறது என்று நாம்
நினைப்பதற்குள் அது வேறொரு வடிவத்திற்கு மாறி புது அவதாரம் எடுத்து நிற்கிறது.
இயற்கையான உணவு முறை மனஉளைச்சலுக்கு ஒரு
நல்ல மருந்து. உடலியல் அளவில் மனஉளைச்சலால் நிகழும் பல சுரப்பு வேறுபாடுகளை அது சமன்படுத்துகிறது.
அப்படிச் சமன்செய்யும் ஆற்றல் இன்றைய வேதிப்பொருட்கள் கலந்த உணவு முறைக்கு இருப்பதாகத்
தெரியவில்லை.
மனஉளைச்சல் உள்ளவர்கள் பொதுவாக ஒரே வேலையில்
மட்டும் மனதைச் செலுத்தி அதை மட்டும் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். மனஉளைச்சலின்
ஆரம்பப் புள்ளி அப்படித்தான் ஆரம்பமாகிறது.
அவர்கள் அது போன்ற ஒற்றைத் தன்மையிலிருந்த
விடுபட வேண்டும். மனம் பன்மைத் தன்மையை விரும்பக் கூடியது என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். பல வேலைகளை கலந்து கட்டிச் செய்ய வேண்டும்.
பல வேலைகளை மாற்றி மாற்றி செய்யும் போது
மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மனம் பல நிலைகளைத்தான் விரும்புகிறது. ஒற்றை நிலையை அல்ல.
உறைந்துப் போகும் ஒற்றை நிலை மனதிற்கு ஆபத்தானதும் கூட.
*****
No comments:
Post a Comment