21 Sept 2017

மக்குக் குழந்தைகளின் கற்றல்

யானும் குவளையும்
தேநீர் அருந்தும்
அநேகச் சந்தர்ப்பங்களில்
நான் குவளையாகிறேன்
நீ தேநீராகிறாய்
அருந்திய பின்
நீ சென்று விடுகிறாய்
காலியாகி விடுகிறோம்
நானும்
குவளையும்.
*****
மக்குக் குழந்தைகளின் கற்றல்
மக்குக் குழந்தைகளை
வெளியேற்றி விட்ட
தனியார் பள்ளியில்
புத்திசாலிக் குழந்தைகள்
சாமர்த்தியத்தைக் கற்கிறார்கள்.
வெளியேறிய மக்குக் குழந்தைகள்
சமத்துவத்தைக் கற்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment