5 Sept 2017

வாய்ப்புகள் எப்போதும் இருக்கின்றன!

வாய்ப்புகள் எப்போதும் இருக்கின்றன!
            இவ்வளவு செயலற்றத் தன்மையை நாம் அண்மைக் காலத்தில் உணர்ந்திருக்க மாட்டோம். அவ்வளவு செயலற்றத் தன்மையை நாம் கண்கூடாகக் காண நேரிடுகிறது.
            நம்முடைய நியாயமான கோரிக்கைகள் கூட மனசாட்சியின்றி மறுதலிக்கப்படும் போது நாம் என்ன செய்வோம்? கடவுளை விட மிகப்பெரிய சக்தி என்பது போல அல்லவா அதைக் கற்பிதம் செய்து கொள்வோம். அப்படி ஒரு கற்பிதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான சூழ்நிலைகளே நம்மைச் சுற்றி நிகழ்கின்றன.
            நடக்கும் எந்த சம்பவமும் நம்பிக்கையை விதைப்பதாக இல்லை. எல்லாம் அவநம்பிக்கையையே விதைக்கின்றன.
            வந்து விழும் வார்த்தைகளைப் பாருங்கள். எதிர்மறை வார்த்தைகளின் தொகுப்பாக உள்ளன. நாம் நம் முயற்சியிலிருந்து பின்வாங்கி விடுவதுதான் நல்லது என்பது போல உபதேசிக்கப்படுகிறோம்.
            மாட்டிக் கொள்வது போல சந்தர்ப்பங்கள் இருப்பதால், பின்வாங்கி விடுங்கள், அதுதான் புத்திசாலித்தனம் என்பது போல மீண்டும் மீண்டும் நாம் நம்ப வைக்கப்படுகிறோம்.
            ஆனால் என்ன? சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது. அது என்னவென்றால் எப்போதும் நமக்கு ஒன்றல்ல, ஒன்றுக்கும் மேற்பட்ட பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களின் கண்களுக்கு அது தெரியாமல் இருப்பது வியப்பல்ல, நமது கண்களுக்குத் தெரியாமல் இருப்பதே வியப்பு.
            நம் கண்கள் அதைப் பார்க்கட்டும். கண்களின் ஒளி என்பது அதுதான்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...