18 Sept 2017

பொய்முகச் சிரிப்பு

பொய்முகச் சிரிப்பு
நாம் நம் குழந்தைகளிடம் அன்பாக இல்லை
பொய்களால் வசீகரிக்கிறோம்
நமது பொய்களை ஏற்றுக் கொள்ளவும்
பிறரது பொய்களை நிராகரிக்கவும் கற்பிக்கிறோம்
இரண்டு பொய்களுக்கும் வேறுபாடு காண்பது
குழந்தைகளுக்கு ஏலாது
அவர்கள் பொறியில் சிக்கும் போது
வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு விடுவார்கள்
சட்டத்தின் ஓட்டைகள் வழியே
வழியும் பொய்முகக்காரர்களின் சிரிப்புகள்
நம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

*****

No comments:

Post a Comment