சமத்தானக் கேள்வி!
ஒரு கோடி உறுப்பினர்களோடு ஒரு கட்சித்
தலைவர் சமத்து சம்புலிங்கத்தின் கட்சியில் ஐக்கியமாக வந்தார்.
சமத்து சம்புலிங்கம் கேட்டார், "உங்கக்
கட்சியில சுமாரா எத்தனைப் பேர் இருப்பாங்க!"
"சுமாரா ஒரு கோடிக்கு மேல இருப்பாங்க!"
என்றார் வந்தவர்.
சமத்து சம்புலிங்கம் தலையைச் சொரிந்தார்.
"வேற ஏதாவது சந்தேகம் இருந்தா கேட்டுக்குங்க!"
என்றார் வந்தவர்.
"அதுல ஸ்லீப்பர் செல்லுல மட்டும்
எத்தனைப் பேர் இருப்பாங்க?" என்றார் சம்புலிங்கம்.
*****
No comments:
Post a Comment