விரக்தி கொண்ட புண்
சீழ் பிடித்தப்
புண்ணில்
வலியெடுக்கிறது
மிதிக்க மிதிக்க
வலிப்பது போல்
கீறிச்சிடுகிறது
மிதிவண்டி
இன்றாவது டாக்டரிடம்
காட்ட வேண்டும்
என்ற
சங்கல்பத்தோடு
இன்றைய நாளும்
கழிந்து விடும்
பிறகு ஒரு
நாள்
அதுவாகக் காய்ந்து
அதுவாகப் பட்டுப்
போய் விடும்
தன்னைக் கொஞ்சம்
கூட
கவனிக்கவில்லை
என்ற
விரக்தியடைந்த
அந்தப் புண்.
*****
No comments:
Post a Comment