9 Sept 2017

மனக்குமுறலை எதிர் கொள்ள...

மனக்குமுறலை எதிர் கொள்ள...
            பலவற்றை ஆரம்பித்து முடிக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ச்சியாக நன்றாகத்தான் நடந்து வருகிறது. இடையில் ஏற்படும் மனச்சோர்வின் காரணமாக தடைபடுகிறது.
            வாழ்க்கையில் பல காரியங்கள் வெறும் கடமைக்குச் செய்வது அல்லவே. மனம் ஒன்றி உற்சாகமாகவும் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான மனநிலை வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டி இருக்கிறது.
            காத்திருப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை இவைகளே வாழ்வில் கடைபிடிக்க வேணடிய முக்கியப் பண்புகளாக இருக்கிறது. வாழ்வில் எவனெவனுக்கோ காத்திருக்கும் போது, கொஞ்சம் மனநிலைக்காகவும் காத்திருந்தால் என்ன என்றுத்தான் தோன்றுகிறது.
            இதில் நேரிடும் கஷ்ட நஷ்டங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது சொல்லுங்கள். சொன்னால், அதைக் கேட்டு குட்டையைக் குழப்பி விடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பொறாமை உணர்வோடு தீங்கு செய்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் கடந்துதான் வர வேண்டி இருக்கிறது.
            எக்காரணம் கொண்டும் மனக்குமுறலை வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலைதான் நம்மைச் சுற்றி இருக்கிறது. சொன்னால் அதன் தன்மையை உணராமல் போட்டுத் தாக்குபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
            மனக்குமுறல் தாங்க முடியாமல் இக்கட்டான சூழ்நிலையிலும் வார்த்தைகளை அவசரப்பட்டு விடாத பொறுமையும் வேண்டும். அப்போதுதான் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடிகிறது.
            வார்த்தைகளை விட்டு விட்டால், அது ஒன்று போதும், பல்லாண்டுகளாகக் கட்டிய கட்டிடத்தை ஒரு நொடியில் இடித்துத் தள்ள.
            இப்படியெல்லாம் யோசிப்பதால் நேரம் போகிறதே என்று நினைக்க வேண்டாம். தெளிவு முக்கியம் அல்லவா! தெளிவுதான் சொத்து, பலம் எல்லாம்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...