9 Sept 2017

சர்வதேச மருத்துவத் தலைநகராயிருக்கலாம் சென்னை!

சர்வதேச மருத்துவத் தலைநகராயிருக்கலாம் சென்னை!
            மருத்துவம் என்றால் எம்.பி.பி.எஸ். மட்டுந்தானா? சித்தா மருத்துவம் இல்லையா? ஆயுர்வேதம் மருத்துவம் இல்லையா? யுனானி மருத்துவம் இல்லையா? யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவம் இல்லையா?
            வெறும் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்காமல் வாழ்வியலைச் சொல்லும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்றவைகள் மாற்று மருத்துவம் என்ற பெயரில் மாற்றப்பட்ட மருத்துவ மருத்துவ முறைகளாகவே தொடர்வதா?
            மாற்றுமுறை மருத்துவத்தின் பாடத்திட்டங்களும், மருத்துவ அணுகுமுறைகளும், ஆய்வுகளும் மேம்படுத்தப்பட்டு அதை நோக்கியும் மாணவர்கள் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அரசு முயன்று அதைச் செய்திருக்க வேண்டும்.
            எம்.பி.பி.எஸ். மருத்துவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக மாற்று முறை மருத்துவர்களும் அரசின் மருத்துவத் துறையில் பணி அமர்த்தப்பட வேண்டும்.
            எம்.பி.பி.எஸ். மருத்துவத்தின் அந்தஸ்து அளவிற்கு அவர்களும் மதிப்படும் அளவிற்கு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
            ஆரம்பச் சுகாதார நிலையத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவரோடு ஒரு மாற்றுமுறை மருத்துவரும் நியமிக்கப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும்? மாற்றுமுறை மருத்துவர்களைப் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.
            எல்லாம் சரியாக நடந்திருந்தால் தமிகழம் மாற்றுமுறை மருத்துவத்தின் சர்வதேச தலைநகராக இருந்திருக்கும்.
            ஆங்கில மருத்துவத்தின் தேசியத் தலைநகர் போல் திகழும் தமிழகத்திற்கு அது ஒரு பெரிய விசயமா என்ன?

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...