1 Sept 2017

பத்து செகண்டில் ஒரு பதில்

பத்து செகண்டில் ஒரு பதில்
            இதுவரை வெளியிட்ட 10 செகண்ட் (நொடி) என்ற கால அளவில் படிக்கக் கூடிய ஹைக்கூ போன்ற இந்தக் குறுங்கதைகள் எல்லாம் ஆனந்த விகடன் இதழின் பத்து செகண்ட் கதைகள் என்ற பகுதிக்காக எழுதப்பட்டு அனுப்பப்பட்டவை.
இவைகளில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தவை பத்தோ, பதினொன்றோ இருக்கலாம். அதற்குக் குறைவாகவும் இருக்கலாம்.
எனக்கு எண்ணிக்கை சரியாக நினைவில் இல்லை என்பதால் ஆனந்த விகடனில் வெளிவந்த பிரசுர எண்ணிக்கையைத் தவறாக கொடுத்து விட்டதாக பிராது பண்ணி விடாதீர்கள்.
            என்றார் டீக்கடைக்காரர், என்றது வாட்ஸ் அப், ஓடியது பேய்ப்படம், பிடித்தார் போலீஸ்காரர், கேட்டார் தலைவர், எடுத்தான் செல்பி... என்று இது போன்று எழுதி எழுதி அலுத்து விட்டதால் நான் மேற்கொண்டு இதுபோன்று எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
            எழுதியதை எல்லாம் கொட்டித் தீர்த்தப் பின் என்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை. மெளனம் மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த மெளனத்தைத்தான் ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துக் கொடுக்க விரும்புகிறேன். இது எதற்காக என்றால் இப்படி நான் எழுதி எழுதி, உங்களைப் படிக்க வைத்து இம்சித்ததை நீங்கள் வெளியே சொல்லி விடாமல் இருப்பதற்காகவும் இருக்கலாம்.
            மறுபடியும் எப்போதாவது பத்து செகண்ட் கதைகள் எழுத வேண்டும் என்று தோன்றினால் எழுதுகிறேன். அதுவரை இந்த பத்து செகண்ட் கதைகளுக்கு பத்து செகண்டில் பதில் சொல்லி விடுகிறேன், "குட் பை!"

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...