26 Aug 2017

தானாக சேர்ந்த எஸ்.கே.விற்கானக் கூட்டம்

தானாக சேர்ந்த எஸ்.கே.விற்கானக் கூட்டம்
            எஸ்.கே.வைப் பேசச் சொல்லி சில கூட்டங்களுக்குக் கூப்பிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக எஸ்.கே. அதிகம் பேசுபவன் அல்லன். அதிகம் எழுதுபவன்.
            அதிகம் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று நினைப்பவன் அவன். அதிகம் பேசுவதால் சக்தியை இழப்பதுதான் மிச்சம் என்று நிறைய பேருக்கு எழுதி அவன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து இருக்கிறான். அது குறித்து கருத்துக் கேட்டவர்களுக்கு மெளனத்தை மட்டும் பதிலாகக் கொடுத்தான்.
            எஸ்.கே. சம்பந்தம் இல்லாமல் சில நேரங்களில் பேசுவான். அது விளக்கத்தை விட அற்புதமான விளக்கமாக அமைந்து அற்புதமான கவர்ச்சியை உருவாக்கும் என்பது அவனது நம்பிக்கை.
            அவனுடைய வாசகர்களின் எண்ணிக்கை எண்ணிக்கைக்கு உட்பட்டது. நான்கு அல்லது ஐந்து பேர் என்று சொல்வது நாகரிமாக இருக்காது என்பதால்தான் எண்ணிக்கைக்கு உட்பட்டது என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
            அதற்கு அவன் என்ன செய்வான்? அதை அதிகபடுத்த வேண்டும் என்று அவன் முயன்றதில்லை. கேட்டால், அதுவாக அதிகமானால் ஆகட்டும், இல்லையென்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்பான்.
            கூட்டம் குறைவாக இருந்தாலும், கூட்டமாக இல்லாவிட்டாலும் எஸ்.கே.வுக்கு இருக்கும் கூட்டம்(!) தானாக சேர்ந்த கூட்டம் என்பதில் அவனுக்கு எப்போதும் ஒரு பெருமிதம். அப்படியே இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...