பேச்சாளர்கள் கவனத்துக்கு...
நல்லது செய்ய வேண்டும் என்பதும், மாற்றத்தை
நிகழ்த்த வேண்டும் என்பதும் ஏற்புடைய கோஷங்கள். அதற்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்தால்
எப்படி? கோட்பாட்டுப் பிரியனான எஸ்.கே. அப்படித்தான் உழைத்தான்.
எதைச் செய்வதற்கும் இயல்பான சூழ்நிலைகள்
அமைய வேண்டும். எஸ்.கே. தன் உயிரைக் கொடுத்து மாற்றங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஒருவருக்கொருவர் இந்தச் செய்திகளைப் பகிர்ந்து
கொண்டிருந்தால் அவனுக்கு இப்படிக் கத்திக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு
இருக்காது. அவன் கத்திக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் முருங்கைக்காய் வாங்குவது
குறித்து பேசிக் கொண்டிருப்பதும், அவன் பேசுவதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தம்
இல்லை என்பது போல வந்தவர்கள் உட்கார்ந்திருப்பதும் அவனை அயர்ச்சி அடைய செய்து விட்டன.
இது போன்ற மல்லுக்கட்டுகள் தேவையில்லாதது
என்பதை இதன் காரணமாக ஏற்பட்ட மண்டை வலியால் அவதிப்பட்ட போது உணர்ந்து கொண்டான். இப்போது
அவன் எதைப் பேசினால் மக்களுக்குப் பிடிக்குமோ அதை மட்டுமே பேசுகிறான். நிறைய ஜோக்குகள் சொல்கிறான். மக்கள் கேட்டு விட்டு
கை தட்டுகிறார்கள். பேசி முடித்ததும் கை கொடுக்கவும் செய்கிறார்கள்.
மக்கள் சிரிப்பதற்கான பல விசயங்களை அவன்
தயார் செய்து கொண்டிருக்கிறான். சீரியஸாகப் பேசுவதை அநேகமாக விட்டு விட்டான். மக்கள்
சீரியஸை விரும்ப மாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான்.
*****
No comments:
Post a Comment