கோட்பாட்டுக்காரனின் நித்திய ஜீவ நடனம்
ஒரே டென்சன்!
ஒரே அலைச்சல்!
அடுத்தடுத்து வேலைகள் என்று ஏற்படுத்திக்
கொள்வதாலா?
பொதுவாக எஸ்.கே.யின் வீட்டுக்குப் போனால்
நத்தை வேகத்தில் நகர்ந்து கெண்டிருக்கும் டென்சன் மொத்த வேகத்தில் எகிறி விடும்.
எஸ்.கே. மனதைப் போட்டு முறுக்கிக் கொள்ளும்
கோட்பாட்டுக்காரன். அவனால் எனக்குச் சிரிக்கக் கற்றுத் தர முடியாது. அவனுக்கு அதைக்
கற்றுத் தருவதில் விருப்பமும் இல்லை. அவனால் முடியவில்லை என்றால் விட்டு விட வேண்டியதுதான்.
என்னால் ஒழுங்காக சிரிப்பது என்பதெல்லாம் முடியாது. அதற்காக மெனக்கெட்டுக் கொண்டும்
இருக்க முடியாது. இஷ்டத்திற்கு மனம் போன போக்கில் சிரிப்பேன்.
முடியாது என்ற விசயத்திற்காக தேவையில்லாமல்
நேரத்தை விரயமாக்குவது முட்டாள்தனம். மனதைச் சுதந்திரமாக விட வேண்டும். அதற்கான தைரியம்
இருந்தால் அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். மனதை இறுக்கிக் கொண்ட எஸ்.கே.யிடம் உரையாடிக்
கொண்டிருந்தால் உரையாடும் நானும் இறுகிக் கொண்டுதான் இருப்பேன்.
எஸ்.கே. சொல்வது போல இதைச் செய்ய வேண்டும்,
அதைச் செய்ய வேண்டும் என்று ஏன் நான் நினைக்கிறேன்? எல்லாம் அதுவாக அமையும். பொதுவாக
என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறுக சிறுகச் செய்து கொண்டிருப்பேன். நடப்பது நடக்கும்.
தானாக நடக்கும். நடைவண்டி வாங்கினால்தான் குழந்தை நடக்கும் என்பது ஏமாற்றுத் தந்திரம்.
அந்த வலையில் வீழ்ந்து விட மாட்டேன்.
அற்புதம் நடக்கும் என்பதற்காக எதையும்
செய்ய மாட்டேன். எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆர்வமும் அக்கறையும் இல்லாதவர்களைக்
கொண்டு எதையும் செய்ய மாட்டேன். அவர்கள் தங்களின் ஆர்வமின்மையால் என்னையும் ஆர்வமின்றிச்
செய்து விடுவார்கள். எஸ்.கே. அப்படிப்பட்டவன்.
இதில் எஸ்.கே.யிடம் பேசும் நான் சாட்சாத்
எஸ்.கே.தான். ஆம்! எஸ்.கே. தனக்குத் தானே எழுதிக் கொள்ளும் எழுத்தின் ஆத்ம பரிசோதனை
முயற்சிகளின் கன்றாவிகளில் இதுவும் ஒன்று.
*****
No comments:
Post a Comment