8 Aug 2017

சிக்கிக் கொள்ள விரும்புபவன்தான் நீ!

சிக்கிக் கொள்ள விரும்புபவன்தான் நீ!
            உலகத்தில் ஆகப் பெரிய விசயம் ஒன்று உண்டென்றால் அது, உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது.
            ஒன்றைச் செய்யும் போது, ஏன் நீ அதைச் செய்கிறாய்? என்று கேட்டிருக்கிறாயா? அதுதான் பிரச்சனை. அதைச் செய்யாமல் வாழ முடியாதா? முடியும் என்றால் ஏன் செய்கிறாய்? அங்குதான் நீ சிக்கிக் கொள்கிறாய். அதைச் செய்ய வேண்டும் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு அவதிப்படுகிறாய். அதைச் செய்வதே முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறாய். ஏன் அப்படி? அப்படி ஏதேனும் இருக்கிறதா?
            விடுவிப்பது எளிதானது. ஆனால் மனம் சிக்கிக் கொள்வதையே விரும்புகிறது. அது தனக்கு எப்போதும் ஒரு டென்சன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அப்படி இருந்தால் மட்டுமே தன்னால் வேலை செய்ய முடியும் என்று நினைக்கிறது. இந்த மடத்தனத்தை எங்குப் போய் சொல்ல? ஆனால் அதுதான் நடக்கிறது. நீ வெகு நுட்பமாக கவனித்தால்தான் இது புரியும்.

*****

No comments:

Post a Comment