8 Aug 2017

மரணத்தின் முனகல்

மரணத்தின் முனகல்
மரண வேதனையில்
முனகும்
ஒரு மனிதனுக்குத்தான்
இறப்பின் அருமை புரியும்.
அவன் வாழ விரும்புகிறானா
சாக விழைகிறானா
என்பதை
அவன் முனகலைக் கொண்டு
சொல்ல ஏலாது.
அவன் வலி
அவனை முனகச் செய்கிறது.
அந்த வலியின் முனகல்கள்
உறக்கம் வராதவர்களுக்கு
வெறுப்பாக இருக்கலாம்.
விழித்திருப்பவர்களுக்குப்
பரிதாபமாகத் தோன்றலாம்.
விரைவில் அவன் இறக்கட்டும்
என்ற பிரார்த்தனைக் குரல்கள்
மனதுக்குள் ஒலிக்கலாம்.
இறப்பு
தனித்தன்மையானது.
அது வரும் வரை
முனகலுடன் காத்திருப்பதைத் தவிர
அந்த மனிதனுக்கு வேறு வழியில்லை.

*****

No comments:

Post a Comment