27 Aug 2017

மகத்தான முறை - மனச்சீக்குப் பிடித்தவர்களை எதிர்கொள்வதற்கு!

மகத்தான முறை - மனச்சீக்குப் பிடித்தவர்களை எதிர்கொள்வதற்கு!
            ஒரு நோய் பிடித்த மனது மற்றவர்களை எப்படி வருத்துகிறது என்றால்... ஒரு நோயால்  பாதிக்கப்படுவதை விட மோசமாக வருத்துகிறது.
            மனச்சீக்குப் பிடித்த குணப்படுத்த முடியாத நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். வறட்டுப் பிடிவாதம், அற்பத்தனமான ஆணவம், தன்னை மட்டும் முன்னிலைபடுத்திக் கொள்ளும் போதை என்று இந்த மனச்சீக்கு பல வகைகளில், பல விதங்களில் வெளிப்படும்.
            நிலைமையின் சிக்கல் நமக்கு எப்படியாகும் என்றால்... இப்படிப்பட்ட இவர்களை ஆதரிக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. ஆதரித்தால்... இவர்களின் தவறுகளுக்கு உடன்போகும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். எதிர்த்தால்... குருட்டுத் தனமாக அவமானப்படுத்த முயல்வார்கள்.
            தங்கள் மனதில் நினைத்தபடி நடக்கவில்லை என்பதற்காக, நைச்சியமாக, எதிர்மறையாகப் பேசும் மனிதர்கள் அவர்கள். ஒருவரை நவநாகரிகமாக கீழ்நிலைப்படுத்துவதை சர்வ அலட்சியமாக செய்து முடித்து விட்டு எதுவும் தெரியாதது போல இருப்பார்கள்.
            "இவர்களுக்கு எதிராக என்ன செய்வது சார்?" என்று புலம்பிக் கொண்டு இருக்காதீர்கள். இவர்களைக் கண்டு கொள்வதுதான் கிருமித் தோற்றுக்கு ஆளாக்கும். கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.
            அப்படி இருந்து விட்டால் உங்களைப் பெரிய ஆள் போல் கருதிக் கொண்டு உங்களின் கவனத்தை ஈர்க்க எதையாவது செய்து கொண்டு இருப்பார்கள் அந்த சாம்பிராணிகள். அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டு மென்மேலும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுங்கள்.
            இந்த ஆலோசனை இப்போது உங்களுக்குக் கிடைத்து விட்டதால்... நீங்கள் தப்பித்தீர்கள்! கிடைக்காதவர்கள் பாவம்தான். முட்டி மோதிக் கொண்டு... அதுவும் காலம் பூராவும்... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஒரு பிறவி... அது இப்படியா வீணாக வேண்டும்!

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...