புதிய சாணக்கியன் பிறந்து விட்டான்!
ஒரு மட்டரகமான செயலைச் செய்வதும், ஒருவனை
வீரன், சூரன் என்று புகழ்வதும் ஒன்றுதான். அதே போல் நிச்சயம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்
என்ற மனநிலையும் அதே வகைப்பட்டதுதான். அது ஒரு வகை ஆபத்தான மனநிலை.
நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்
அப்போது மனநிலை என்ன செய்யும்? எப்படி வேலை செய்யும்?
உளறிக் கொட்டி உருப்படாமல் போனவர்கள்
நிறைய. அப்படி ஒரு நிலை வந்து விடக் கூடாது.
சூழ்நிலைகள் சாதகமாக, சுற்றியிருப்பவர்கள்
ஆர்வமூட்ட ஒரு செயலை நிறைவேற்ற வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும்.
அதுவரை எதை நிறைவேற்ற நினைக்கிறாயோ அதை
வெளிப்படுத்தாமல் இருப்பது புத்திசாலித்தனம். அவைகள் தீர்ப்பதற்கு உட்பட்டவை. தீர்த்துக்
கட்டுவதற்கும் உட்பட்டவை. மேலும் அவைகள் மனதின் வெளிப்பாடுகள். வெளிப்பட்டுப் போய்க்
கொண்டும் இருக்கும்.
கொஞ்சம் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க
வேண்டிய இடம் அது. ஒன்று மனச்சோர்வு வீழ்த்தும். இரண்டு மனதைச் சோர்வடையச் செய்து
வீழ்த்துவார்கள். இரண்டுக்கும் தயாராக இருப்பதற்கு எதையும் கண்டு கொள்ளாத ஆள் என்று
நீ நிருபித்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லாவற்றையும் நீ மெளனமாக கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறாய். கவனம், மெளனமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாய். கவனத்தில் வைத்துப்
புரிந்து கொள்.
*****
No comments:
Post a Comment