9 Aug 2017

புதிய ஸ்டைல்

கமுக்கம்
            "அவன் வீட்டுக்கேப் போய் மிரட்டிட்டேன்!" பந்தாவாக சொல்லிக் கொண்டிருந்தார் பரமசிவம். "எல்லாம் சிசிடிவி கேமிராவுல பதிவாயிருக்கு!" கமுக்கமாய்ச் சிரித்துக் கொண்டார் கோசலராமன்.
*****
புதிய ஸ்டைல்
            "கை, கால எடுக்குறதுல்லாம் பழைய ஸ்டைல். அவன் கையில இருக்குற ஸ்மார்ட் போனை மட்டும் பிடுங்கிடுங்க, பயந்துடுவான்!"  மீசையை முறுக்கியபடியே தன் ஆட்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் கைலாசம்.
*****
பீ கேர்புல்!
            "நீங்க மாட்டிகிட்டா எப்படியும் ஜாமீன் எடுத்துடுவேன். கையில இருக்குற செல்லு மாட்டிகிட்டா எதுவும் பண்ண முடியாது." போலீஸிடம் மாட்டிக் கொண்டால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சகாக்களிடம் விளக்கிக் கொண்டிருந்தான் கிருபா.

*****

No comments:

Post a Comment