2 Aug 2017

நடுவுல கொஞ்சம் வாழ்க்கை

இயற்கை
            "ஒரு கிலோ அரிசியை முப்பது ரூபாய்க்கு வாங்க முடியாம தவிக்கிறப்ப, அரை கிலோ அரிசியை அறுபது ரூபாய்க்கு விற்குறாங்களே?" என்ற கண்ணனிடம் முருகன் சொன்னான், "இது இயற்கை முறையில விளைஞ்சதுடா!". இயற்கை முறையில விளைஞ்சதுக்கு எதுக்கு நாலு பங்கு விலை வைத்து விற்கணும் என்று புரியாமல் முழித்தான் கண்ணன்.
*****
நடுவுல கொஞ்சம் வாழ்க்கை
            "இயற்கை முறையில விளைஞ்சதுன்னு அவனுங்க விலையை ஏத்திச் சாகடிப்பானுங்க. விலை கம்மின்னு இவனுங்க ரசாயனத்தை ஏத்திச் சாகடிப்பானுங்க!எப்படியும் சாவு கன்பார்ம்!" என்றான் மிடில் கிளாஸ் மகேஷ்.
*****
ஸ்டேட்டஸ்
            பிரிட்ஜிலிருந்த கூல் டிரிங்ஸை எடுத்துக் குடித்தபடியே, ஏ.சி. ரூமிலிருந்து ஸ்டேட்டஸ் போட்டான், "பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான மாநாட்டிலிருந்து அமெரிக்க வெளியேறியிருக்கக் கூடாது!"

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...