2 Aug 2017

மேடையில் வீசும் மாறாத பூங்காற்று

மேடையில் வீசும் மாறாத பூங்காற்று
            தமிழ் நாட்டு மேடைப் பேச்சுகள் நயம் புரட்டும் முயற்சிகளாக இருக்கின்றன. பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறார்கள். அல்லது சிரிக்க வைக்கிறார்கள். அவன் எப்போதும் கைதட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனை கோமாளித்தனங்களையும் செய்கிறார்கள்.
            நடுநிலையானப் பேச்சாளர்களை தமிழ்நாட்டு மேடைகளில் காண்பது அரிது. தன் சொந்தக் கதையை, சுய தம்பட்டங்களை சொல்லாதப் பேச்சாளர்கள் அரிதினும் அரிது. தங்கள் பார்வைகளை வலிந்து திணிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். எல்லாம் சூழலையும், எதார்த்தத்தையும் கருத்தில் கொள்ளாத தட்டையானப் பார்வைகள் என்பது வேறு விசயம்.
            பெரும்பாலான மேடைப்பேச்சுகள் அந்த நேர ரசிப்பை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. கேட்போரை ஆழ்ந்த விவாதத்திற்கு இட்டுச் செல்வதில்லை. நீங்கள் சிந்திக்க முயன்றால் பேச்சின் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதற்காகவே ஆங்காங்கே தேர்ந்த நகைச்சுவை நடிகர்களைப் போல் சிரிக்கவும் வைக்கிறார்கள்.
            மேடைப் பேச்சின் ஆழங்களைத் தொட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த ஆழம் தொடப்பட்டால்தான் அறிவார்ந்த மாற்றங்கள் நிகழும். இல்லையேல் அழிந்து கொண்டிருக்கும் பொழுதுபோக்குக் கலைகளில் அதுவும் ஒன்று.
            ஒரு மேடையில் பேசியப் பேச்சை வைத்துக் கொண்டு அரைத்த மாவையே வைத்து விதவிதமாக அரைக்கும் ரசவாதம் தமிழ் நாட்டுப் பேச்சாளர்களுக்கு மட்டும் வாய்த்த மரபாம்சம். ஒரு மேடைப் பேச்சாளரை இரண்டாவது மேடையில் சந்திக்கும் அனுபவம் ஏற்பட்டால் நீங்கள் கிழிந்து கந்தலாகி விடுவீர்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...