மீண்டும் காமராசர் ஆட்சி
"காமராசர் ஆட்சியை அமைப்போம்!"
என்ற பூவுலகின் முழக்கத்தைக் கேட்ட, மேலுலகில் இருந்த காமராசர் ஆன்மா சிரித்துக் கொண்டது,
"ஒவ்வொரு தடவையும் வாக்குறுதி கொடுத்து இத்தனை வருசங்கள் ஆகியும் இன்னுமா காமராசர்
ஆட்சியை அமைக்கல!"
*****
மறுப்பு
"பத்தாயிரம் இருந்தா சாவு செலவுக்கு
ஆவும்!" என்று சாகும் கடைசி தறுவாயிலும் ஸ்கேன் எடுக்க மறுத்து விட்டாள் ஆச்சியம்மா.
*****
தூண்டில்
தூண்டில் போட்டு மீன் பிடித்து விற்றுக்
கொண்டிருந்த முருகேஷ், மண்புழு உரம் தயாரித்து மாதந்தோறும் பதினைந்தாயிரம் சம்பாதிக்க
ஆரம்பித்தான்.
*****
No comments:
Post a Comment