ரஜினி - சில அரசியல் தரவுகள்
அற்புதங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் இன்னும்
இருக்கிறார்கள். அவர்கள் ரஜினியின் அரசியலை ஏற்பார்கள்.
ரஜினி தனக்கான அரசியல் தளத்தை இன்னும்
தனது திரைப்படங்கள் வாயிலாகத் தேடிக் கொண்டு இருக்கிறார். அவரால் ஏற்படுத்தப்படலாம்
என்று நினைக்கும் சமூக மாற்றம் சுத்த சுழியமாக இருக்கும். சமூகம் என்பது கேமிராவுக்குள்
அடைபடும் சினிமாவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
சிந்திக்க மறுத்தால், உணர்ச்சி வசப்படுவதை
விரும்பினால் ரஜினியின் அரசியலை விரும்பலாம். உணர்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு, சிந்திக்க
ஆரம்பித்தால் ரஜினியின் அரசியல் என்பது ஓர் ஊடக விளம்பர அரசியல் என்பதை விளங்கிக் கொள்ள
நெடுநேரம் ஆகாது.
ரஜினியின் அரசியல் கருத்துகளைக் கூர்ந்து
கவனிப்பவர்கள், அப்படியே கொஞ்சம் மார்க்ஸ், அம்பேத்கார், பெரியார் ஆகியோரின் அரசியல்
கருத்துகளையும் கூர்ந்து கவனிக்கலாம்.
மக்களுக்காக உழைப்பது என்பது கற்பனாவாத
தியாகம் அல்ல. செயல்வடிவிலான உண்மையான தியாகம். கேமிராவுக்கு முன் தியாகம் செய்து விட்டு,
நான்கு அறைகளுக்குள் போய் ஏ.சி.யைப் போட்டுக் கொண்டு உறங்க முடியாது. இத்தரவுகள்
குறிப்பிட்ட உச்சபட்ச எதிர்பார்ப்பிற்கு உள்ளாகும் ஒருவருக்கு மட்டுமானது மட்டுமல்ல.
அவரைப் பின்தொடர்ந்து அதே பாணியில் வர விரும்பும் அனைவர்க்குமானது.
*****
No comments:
Post a Comment